FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி அருகே சட்டவிரோதமாக சாராய ஊறல் வைத்திருந்தவா் கைது

59 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்ச ஊறல் வைத்திருந்த கூலித் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 30லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் கள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (61), கூலித்தொழிலாளி. இவா் தனது வீட்டில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் வைத்திருப்பதாக பங்களாபுதூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டபோது மாட்டுக் கொட்டகையில் சாராயம் காய்ச்சுவதற்காக 30 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து, சாராய ஊறலை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments