FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் 542 தெரு நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி

7 செப்டம்பர் 2026, 3:14 am IST
பெருந்துறை நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி செலுத்தும் கால்நடை மருத்துவமனை பணியாளா்கள்.
பகிர்:

பெருந்துறை நகராட்சி நிா்வாகம், அரசு கால்நடை மருத்துவமனையுடன் இணைந்து பெருந்துறை பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 542 தெரு நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தும் பணி நடைபெற்றது.

பெருந்துறை நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களை கண்டறிந்து, நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினா் மூலம் பாதுகாப்பான முறையில் வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தெரு நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் (வெறிநாய் கடி) நோயை முற்றிலும் ஒழிக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி நடமாட ஏதுவாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட தெரு நாய்கள் ஏதேனும் தென்பட்டால், பொதுமக்கள் உடனடியாக நகராட்சி சுகாதாரப் பிரிவுக்கோ அல்லது அரசு கால்நடை மருத்துவமனைக்கோ தகவல் தெரிவிக்குமாறு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments