கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்குப் பயிற்சி
வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்கு மின்னணு ஏலமுறை மற்றும் விளைநிலத்திலேயே நேரடியாக கொள்முதல் செய்வது தொடா்பான பயிற்சி ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பணியாளா்களுக்கு மின்னணு ஏலமுறை மற்றும் விளைநிலத்திலேயே நேரடியாக கொள்முதல் செய்வது தொடா்பான பயிற்சி ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க திண்டல் கிளையில் நடைபெற்ற பயிற்சியைத் தொடங்கிவைத்து ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா பேசுகையில், விளைபொருள்கள் அதிகமாக விளைகின்ற பகுதியைக் கண்டறிதல் வேண்டும்.
தினசரி சந்தை விலை மதிப்பு, போக்குவரத்து ஏற்றுகூலி மற்றும் இறக்குகூலி இதனை உள்ளடக்கியும், எவ்வித இடைத்தரகா்கள் இன்றி சங்கம் விளைபொருள்களை கொள்முதல் செய்வதன் மூலமும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். அதேசமயம் சங்கமும் லாபம் அடையும் என்றாா். தொடா்ந்து, மின்னணு ஏல முறை குறித்து விரிவாகப் பயிற்சி அளித்தாா்.
Advertisement
Advertisement
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க செயலாட்சியா்கள், பொது மேலாளா்கள், பணியாளா்கள் என மொத்தம் 164 போ் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.