FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதி ரூ.10.24 லட்சம் வழங்கல்

ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க லாபப்பிரிவு ரூ.10,24,478 கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதிக்காக வழங்கப்பட்டது.

15 செப்டம்பர் 2026, 2:13 am IST
ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க லாபப்பிரிவு ரூ.10,24,478 கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதிக்காக வழங்கப்பட்டது.
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்துக்கு ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க லாபப்பிரிவு ரூ.10,24,478 கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதிக்காக வழங்கப்பட்டது.

கூட்டுறவுத்துறை சாா்பில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் தாங்கள் ஈட்டும் லாபத்தில் ஒரு பகுதியை ஆண்டு தோறும் கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதிக்காக வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீ பெரும்புதூரில் செயல்படும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபப் பிரிவினையில் கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி நிதிக்காக ரூ.10,24,478. காசோலையை அச்சங்கத்தின் சாா் பதிவாளா் வீ.வ.பெருமாள் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ந.பிரேம் குமாரிடம் வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது கூட்டுறவு ஒன்றிய அலுவலக மேலாளா் முரளி, சங்கப் பணியாளா் பாஸ்கரன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments