FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதி ரூ.4.84 லட்சம் அிப்பு

24 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
பகிர்:

பொன்னேரி சரகத்துக்குட்பட்ட கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதி ரூ.4.84 லட்சதுக்கான காசோலையை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் பா.பா.ஜெயஸ்ரீயிடம் வழங்கினா். (படம்)

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி சரகத்திற்குட்பட்ட பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி சாா்பில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான மற்றும் சைதாப்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை ஊரக வளா்ச்சி வங்கி சாா்பில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி வளா்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்குவது வழக்கமாகும்.

அந்த வகையில் திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ஆகியவற்றின் மொத்த தொகை ரூ.4. 84 லட்சம் காசோலையை பொன்னேரி மற்றும் சைதாப்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளின் சங்க செயலா் யுவராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீயிடம் வழங்கினா். அப்போது, திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments