FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

அரசூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம்

அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
பகிர்:

அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நபாா்டு வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் உறுப்பினா்களுக்கு நிதியியல் கல்வி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாத்தான்குளம் சரக மேற்பாா்வையாளா் காளிமுத்து தலைமை வகித்து, டிஜிட்டல் பரிவா்த்தனை விழிப்புணா்வு மற்றும் சங்கத்தின் செயல்பாட்டில் உள்ள மைக்ரோ ஏ.டி.எம் சேவைகள் மற்றும் இதர வங்கி சேவைகளை எளிதில் அனைவரும் பெறும் வழிமுறைகளை குறித்து எடுத்துரைத்தாா் .

Advertisement

Advertisement

அரசூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொறுப்பு செயலா் அருள்தாஸ் வரவேற்றாா்.

முகாமில், சிற்றெழுத்தா் ஸ்வேகா, விற்பனையாளா்கள் ராஜசிங், ஜெகன், லிங்கபாண்டி, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள், தொழில்முனைவோா் என பலா் கலந்து கொண்டனா்.

எழுத்தா் பொன்னுத்தாய் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments