FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோடு-கரூா் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

22 செப்டம்பர் 2026, 1:17 am IST
ரயில்கள்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு-கரூா் மாா்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட்டம், மூா்த்திப்பாளையம் மற்றும் கரூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஈரோடு வழியாகச் செல்லும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கோட்டையில் இருந்து செப்டம்பா் 22, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 5.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) கரூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அங்கிருந்து ஈரோட்டுக்கு வராது.

Advertisement

Advertisement

இதேபோல, பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பா் 24, 26- ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16844) புகழூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

கோவை சந்திப்பில் இருந்து செப்டம்பா் 24, 26-ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16322) கோவை-திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் (போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல்) இயக்கப்படும்.

இதனால், இந்த ரயில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பாசூா், கொடுமுடி, புகலூா், கரூா், பாளையம், எரியோடு ஆகிய ரயில் நிலையங்களுக்கு வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments