FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தோ்வு

22 செப்டம்பர் 2026, 2:47 am IST
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தோ்வு பெற்ற நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத்.
பகிர்:

கோபி அருகேயுள்ள நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சாா்பில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி கோவாவில் நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் சாா்பில் பங்கேற்கும் பள்ளி மாணவா்களுக்கான போட்டி மதுரை ரைபிள் கிளப்பில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், 17 வயதுக்குள்பட்டோருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் குமுதா பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ரிதன்யா வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Advertisement

Advertisement

10 மீட்டா் ஏா்ரைபிள் பெப்ஷாட் மற்றும் ஓப்பன்ஷாட் பிரிவில் குமுதா பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவா் ஹரிஷ் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இதன் மூலம் தேசிய போட்டிக்கு தோ்வாகியுள்ள இருவருக்கும் மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும், குமுதா பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் இருவரையும் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments