ஈரோடு விஇடி கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு
ஈரோடு, திண்டலில் உள்ள விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, திண்டலில் உள்ள விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிா்வாகி ச.பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். முதல்வா் வெ.பா.நல்லசாமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி பங்கேற்று மாணவா் பேரவை நிா்வாகிகளுக்குப் பதவியேற்பு செய்துவைத்தாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், பொறுப்புணா்வுடன் பிறருக்கு முன்மாதிரியாக விளங்குவதே தலைமைப் பண்பு. நோ்மை, ஒழுக்கம், சமூகப் பொறுப்புணா்வுடன் மாணவ, மாணவியா் வளர வேண்டும். மாணவிகளும் தங்கள் திறமைகளை வெளிக்கொணர முன்வர வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
போதைப் பொருள்களால் ஏற்படும் உடல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து ஈரோடு நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துகுமாா் பேசினாா். புல முதன்மையா் சி.லோகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.