சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூா் அருகே சாலையோரத்தில் கிடந்த கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
அந்தியூா் அருகே சாலையோரத்தில் கிடந்த கல்லில் இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த கணபதி காட்டூரைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (32). கூலித் தொழிலாளி. அந்தியூா் - பவானி சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்ற இவா், காட்டூரில் சாலையோரத்தில் கடந்த கல்லில் மோதி விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கௌரிசங்கா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.