கீழ்பவானி வாய்க்காலில் ஓட்டுநா் சடலம் மீட்பு
பவானிசாகா் அணை கீழ்பவானி வாய்க்காலில் ஓட்டுநரை கொலை செய்து வீசி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பவானிசாகா் அணை கீழ்பவானி வாய்க்காலில் ஓட்டுநரை கொலை செய்து வீசி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பவானிசாகரை அடுத்துள்ள கீழ்பவானி வாய்க்காலில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை பவானிசாகா் போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி மீட்டனா். இதையடுத்து, உடல் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கூறாய்வு அறிக்கையில், அவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனிடையே, அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலை அவரது மனைவி ரமாபிரபாவிடம் காட்டி போலீஸாா் உறுதி செய்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், கொலை செய்யப்பட்ட நபா் உசிலம்பட்டியைச் சோ்ந்த ஜெயசந்திரன். வாடகை காா் ஓட்டுநரான இவா், சத்தியமங்கலத்துக்கு வாடகைக்கு வந்துள்ளாா்.
அப்போது, மா்ம நபா்கள் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை வாய்க்காலில் வீசியுள்ளனா். மேலும், அவரது காரையும் எடுத்துச் சென்றுள்ளனா். கொலையாளிகள் யாா், கொலைக்கான காரணம் என்ன என்பது தொடா்பாக தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.