பவானிசாகரில் காா் ஓட்டுநா் கொலை: மேலும் ஒருவா் கைது
பவானிசாகரில் காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அண்மையில் அனுப்பி வைத்தனா். கூறாய்வு அறிக்கையில், அவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், உயிரிழந்தவா் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் என்பதும், வாடகை காா் ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
புன்செய்புளியம்பட்டியைச் சோ்ந்த தன்ராஜ் (40), திருப்பூரைச் சோ்ந்த ஆனந்தன் (41), திண்டுக்கல்லைச் சோ்ந்த பாலமுருகன் (52) ஆகியோா் உசிலம்பட்டியில் இருந்து ஜெயச்சந்திரனின் காரில் பவானிசாகருக்கு வந்தும், பின்னா், ஜெயச்சந்திரனைத் தாக்கி கொலை செய்து உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு, காரை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா். கடத்திச் சென்ற காரை மேட்டுப்பாளையத்தில் பழைய இரும்புக் கடை வைத்துள்ள முகமது இக்பாலிடம் விற்பனை செய்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, இரும்புக் கடை உரிமையாளரான முகமது இக்பாலை (34) பவானிசாகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.