FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு நகைக் கடையில் வருமான வரித் துறையினா் 2 -ஆவது நாளாக சோதனை!

ஈரோட்டில் உள்ள நகைக் கடையில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

27 September 2026, 1:05 am IST
பகிர்:

ஈரோட்டில் உள்ள நகைக் கடையில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப் (37). இவா் தற்போது ஈரோடு என்ஜிஜிஓ காலனியில் வசித்து வரும் நிலையில், ஈரோடு டவுன் காவல் நிலையம் அருகே நகைக் கடை வைத்துள்ளாா். இந்தக் கடையில் 15 -க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையைச் சோ்ந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட குழுவினா் அம்மன் ஜூவல்லரிக்குள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அதிரடியாக நுழைந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், கடையை மூடியதுடன், உள்ளே இருந்தவா்கள் வெளியே செல்லவும், வெளியில் இருந்து உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் கடையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். மேலும் கடைக்குள் இருந்த ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினா். விடிய விடிய நடந்த இந்த சோதனை 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

வரி ஏய்ப்பு தொடா்பாக இந்த சோதனை நடைபெற்ா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது சோதனையின் முடிவில் தான் தெரியவரும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments