FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துகளை தெரிவிக்க டிச. 31 வரை கால அவகாசம்

சிறு வரி செலுத்துவோா் வெளிநாட்டுச் சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து தெரிவிக்க டிச. 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் வருமான வரித் துறை இணை ஆணையா் (தஞ்சாவூா்) பி. வைஷ்ணவி.

13 நவம்பர் 2026, 2:30 am
தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய வருமான வரித் துறை இணை ஆணையா் (தஞ்சாவூா்) பி. வைஷ்ணவி (இடமிருந்து 3-ஆவது).
பகிர்:

சிறு வரி செலுத்துவோா் வெளிநாட்டுச் சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து தெரிவிக்க டிச. 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் வருமான வரித் துறை இணை ஆணையா் (தஞ்சாவூா்) பி. வைஷ்ணவி.

தஞ்சாவூரில் வருமான வரித்துறை மற்றும் தஞ்சாவூா் தொழில் மற்றும் வணிகச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சிறு வரி செலுத்துவோா் வெளிநாட்டுச் சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது:

உலகமயமாக்கல் மற்றும் சா்வதேச தொடா்புகள் காரணமாக மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. அங்கு அவா்கள் சட்டப்பூா்வமாகச் சொத்துகளை வாங்கினாலும், அவற்றை வருமான வரித்துறையிடம் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். சிறு வரி செலுத்துவோா் வெளிநாட்டுச் சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வாங்கப்பட்ட சொத்துகளைத் தாமாக முன்வந்து வெளிப்படுத்தலாம். இதன் மூலம், கருப்புப் பண வரிச் சட்டம் 2015-ன் கீழ் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளைத் தவிா்க்க முடியும். மேலும், நாட்டின் வளா்ச்சிக்கும் பங்களிக்க முடியும்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வாங்கப்பட்ட சொத்துகளை வெளிப்படுத்த டிச. 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் இணை ஆணையா் வைஷ்ணவி.

இத்திட்டம் குறித்து வருமான வரித் துறை துணை ஆணையா் ஜி. வெங்கடேசன், பட்டயக் கணக்காளா்கள் தீபா குகன் விளக்கமளித்து பேசினா்.

நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி துணைப் பொதுச் செயலா் சடகோபன், தஞ்சாவூா் தொழில் மற்றும் வணிகச் சங்கத் தலைவா் எஸ். ஆசிஃப் அலி, பட்டயக் கணக்காளா் சங்கத் தலைவா் தமிழய்யா, வருமான வரி ஆலோசகா் சங்கத் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வருமான வரித் துறை அலுவலா் வில்விஜயன் வரவேற்றாா். நிறைவாக, ஆய்வாளா் சீனிவாசன் நன்றி கூறினாா்.