நீலகிரி மாவட்ட கூட்டுறவு வளர்ச்சி திட்ட அதிகாரி பொறுப்பேற்பு
நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட அதிகாரியாக சி.குருமூர்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட அதிகாரியாக சி.குருமூர்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
இதுவரை இப்பணியை கூடுதலாக கவனித்து வந்த மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் முருகன் வியாழக்கிழமை அப்பொறுப்பை குருமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்திக்கு மண்டல துணைப் பதிவாளர் முகமது மீரான், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் வாசுதேவன், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் சக்கரவர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் வசந்தா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.