FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

பசுந்தேயிலைக்கு ரூ. 12.20 விலை நிர்ணயம் 

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ. 12.20 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குந்தா தேயிலை வாரிய இணை இயக்குநர் ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:23 am IST
பகிர்:

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ. 12.20 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குந்தா தேயிலை வாரிய இணை இயக்குநர் ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு ஜூலை மாதத்துக்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை அனைத்துத் தொழிற்சாலை நிர்வாகங்களும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 
மேற்படி விலையை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். 
மேலும் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் ஆகியோர், தேயிலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments