நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு காலநிலை காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு காலநிலை காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்றப் பகுதிகளில் குளுகுளு காலநிலை காணப்படுதால் சனிக்கிழமை இரவு வரை ஒரே நாளில் 7,216 சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியில் பூங்காவுக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்ப நிலையும் காணப்படுவதால் இதை அனுபவித்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். உதகை, குன்னூர். கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா ஆகிய இடங்களுக்கு வர சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பூங்காக்களில் பெருமளவு மலர்கள் இல்லை என்றாலும்கூட, மிதமான தட்பவெப்ப நிலை காணப்படுவதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாகத் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.