விதிகளை மீறிய காட்டேஜ்களுக்கு அனுமதிபெற ஆகஸ்ட் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி காட்டேஜ் கட்டியுள்ளவர்கள் உரிய அனுமதி பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி காட்டேஜ் கட்டியுள்ளவர்கள் உரிய அனுமதி பெற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி:
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பலரும் வீட்டுமனைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு அனுமதி பெற்றுகொண்டு காட்டேஜ்களாக பயன்படுத்தி வருவது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை முறைப்படுத்தும் வகையில் வீட்டுமனைக் குடியிருப்பு அனுமதி பெற்று காட்டேஜ்களாகப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வீட்டுமனை குடியிருப்புக் கட்டடங்களை காட்டேஜ்களாக பயன்படுத்துவதற்கான திருத்திய திட்டத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில், அனுமதியில்லாத காட்டேஜ்களுக்கு செப்டம்பர் மாதத்தில் சீல் வைத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.