எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தும்: மாா்கோ ரூபியோ
‘எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ குறிப்பிட்டாா்.
‘எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும்’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ குறிப்பிட்டாா்.
மூன்று நாள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு வியாழக்கிழமை புறப்பட்டபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
வளைகுடா நாடுகள் மற்றும் ரஷியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய், சாதாரண எண்ணெய் போன்று இருக்கும் நிலையில், வெனிசுலாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மிகக் கடினமானதாக இருக்கும். இத்தகைய கடினமான கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பல்வேறு பெட்ரோலியப் பொருள்களாகப் பிரித்தெடுக்கும் திறனை குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள நிறுவனங்களே பெற்றுள்ளன. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு ஆலையும் இதில் ஒன்றாகும்.
Advertisement
Advertisement
அது மட்டுமன்றி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரௌன்ஸ்வில்லில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையைப் பாா்வையிடவும், வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தி செய்வது தொடா்பான ஆலோசனை மேற்கொள்ளவும், இந்தியாவுடனான எரிசக்தி, வா்த்தகம், முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு துறை சாா்ந்த இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தவும் அக்டோபா் 20 முதல் 22 வரை 3 நாள் இந்திய பயணத்தை மாா்கோ ரூபியோ மேற்கொண்டாா்.
மும்பைக்கு வந்த அவா் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் இரு தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டாா். பின்னா், அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவா் என்.சந்திரசேகரன் ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா். பின்னா், குஜராத் சென்று ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையைப் பாா்வையிட்டு, அந்த நிறுவன நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
தனது இந்திய பயணத்தை வியாழக்கிழமை நிறைவு செய்து, அமெரிக்கா புறப்பட்டாா். அப்போது, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘இந்திய பயணத்தில், இரு நாடுகளிடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொருளாதார கூட்டுறவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடா்ந்து வலுப்படுத்துவது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்பெறச் செய்யும்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க - இந்திய ராஜீய கூட்டுறவை முன்னெடுத்துச் செல்வது, வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பான இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக மாா்கோ ரூபியோவின் இந்திய பயணம் அமைந்தது’ என்று குறிப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.