கோத்தகிரி பில்லிக்கம்பை பஜாரில் உள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்
கோத்தகிரி, பில்லிக்கம்பை பஜாரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி, பில்லிக்கம்பை பஜாரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி தாலுகா, கக்குச்சி கிராமத்துக்கு உள்பட்ட பில்லிக்கம்பை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. கட்டபெட்டு - கக்குச்சி இடையே பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த மதுக்கடை அருகே, அரசுப் பள்ளிகள், கோயில்கள், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.
கக்குச்சி, தூனேரி மற்றும் கூக்கல் ஊராட்சிகளுக்கு உள்பட்ட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருபவர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலையிலேயே வீசி செல்கின்றனர்.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்தக் கடையை அகற்றவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதே சாலையில் இடுஹட்டி பகுதியில் இயங்கிவந்த மதுக்கடை அகற்றப்பட்டுள்ள நிலையில், பில்லிக்கம்பை கடையையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லாதபட்சத்தில், சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினரை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.