மீன் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புழம்பட்டி பகுதியில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் தொழில் நுட்ப மேலாளர் க.யமுனப்பிரியா வரவேற்றார்.
இதில், பண்ணைக் குட்டையில் கூட்டு மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. முன்னோடி விவசாயி ஜோசப் மீன் வளர்ப்பில் தனக்கு கிடைத்த அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார். அஞ்சிகுன்னு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற விவசாயி வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து விளக்கமளித்தார்.
உதவித் தொழில் நுட்ப அலுவலர் சந்தியா, உதவி தோட்டக் கலைத் துறை அலுவலர் அரவிந் ஆகியோர் தோட்டக் கலைத் துறை திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். தொழில் நுட்ப மேலாளர் ஜான்சி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.