FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கோடை சீசன் முடிந்ததால்  வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்

நீலகிரியில்  மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்துவிட்ட நிலையில் இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்  புதன்கிழமை  வெறிச் சோடிக் காணப்பட்டன.  

Updated On : 7 ஜூன் 2018, 7:54 am IST
பகிர்:

நீலகிரியில்  மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்துவிட்ட நிலையில் இங்குள்ள சுற்றுலாத் தலங்கள்  புதன்கிழமை  வெறிச் சோடிக் காணப்பட்டன.  
நீலகிரியில்  மாவட்டத்தில் மே கடைசியில் கோடை சீசன் முடிந்தவடைந்தாலும்கூட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைப் படிப்படியாகவே  குறையத் தொடங்கின. நீலகிரிக்கு வருகை  தரும்  சுற்றுலாப் பயணிகள் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களான சிம்ஸ்பார்க், லேம்ஸ்ராக், டால்பின்நோஸ், காட்டேரி பார்க், கோத்தகிரியில் உள்ள கொடநாடு  காட்சி முனை, நேரு பார்க், கேத்தரின் அருவியைக் கண்டு  ரசிப்பதோடு சிம்ஸ்பார்க்கில் உள்ள மினி ஏரியில் படகு   சவாரி  செய்வதில்  அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர்.
வட மாநிலங்கள் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். நீலகிரியில் தங்கி இருந்த  பெரும்பாலான  சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியதால் குன்னூரில் உள்ள  பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி  காணப்பட்டன.   சுற்றுலாத்  தொழிலை நம்பி உள்ள  வியாபாரிகளுக்கு இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments