FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

நகராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் திருப்திகரமாக உள்ளன:   நாடாளுமன்ற நிலைக் குழு

நீலகிரி  மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில்  வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள்  திருப்திகரமாக இருப்பதாக மத்திய அரசின்

Updated On : 7 ஜூன் 2018, 7:53 am IST
பகிர்:

நீலகிரி  மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில்  வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள்  திருப்திகரமாக இருப்பதாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவினர் புதன்கிழமை  தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பினாக்கி மிஸ்ரா தலைமையிலான குழுவினர் இரண்டாவது நாளாக புதன்கிழமை கலந்தாய்வுப் பணியில் ஈடுபட்டனர். 9 பேர் கொண்ட  இந்தக் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்  இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வில் ஈடுபட்டனர்.
இதில், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் சிறந்த ஒத்துழைப்புக் காரணமாக  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதில் உதகையும்  சேர்க்கப்பட்டிருப்பதாகவும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் செயல்பாடு திருப்தி அளிப்பதாக  உள்ளது என இக்குழுவினர் தெரிவித்தனர்.
கலந்தாய்வில்  மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments