46 பவுன் திருட்டு: கேரளத்தை சேர்ந்த பெண் கைது
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த மே மாதம் ஒய்எம்சிஏ வளாக வீட்டில் 46 பவுன் நகைகளைத் திருடியது தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த பெண்ணைக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த மே மாதம் ஒய்எம்சிஏ வளாக வீட்டில் 46 பவுன் நகைகளைத் திருடியது தொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த பெண்ணைக் காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த மே மாதம் ஒய்எம்சிஏ வளாகத்தில் உள்ள பிரேம் என்பவரது வீட்டில் 46 பவுன் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின்பேரில், ஆய்வாளர் லட்சுமணதாஸ் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் காவல் துறையினர் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, தனிப் படையினர் கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த ரூபினா (எ) விஜி என்பவரை கைது செய்தனர். மேலும், திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய அவரது கணவர் ஜெயகுமார் ஏற்கெனவே நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் கடந்த மார்ச் மாதம் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ரூபினாவிடம் இருந்து 16 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் ஆயுர்வேத எண்ணெய் விற்பதுபோல வீடுகளை நோட்டமிட்டுத் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.