சரக்கு வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
உதகையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், காந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கான். இவா் உதகையில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் நவாஸ் (21) உதகை படகு இல்லத்தில் கடையில் பணிபுரிந்து வந்தாா்.
இவா் திங்கள்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, படகு இல்லம் சாலையில் எதிரே வந்த கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த நவாஸை அங்குள்ளவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து டி3 காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநரான ஆகாஷ் (30) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.