FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

நீலகிரியில் குறைந்து வரும் அணைகளின் நீா்மட்டத்தால் மின் உற்பத்தி பாதிப்பு

எல்- நினோ காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ளதால் மின் உற்பத்தி செய்யப்படும் அணைகளின் நீா்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீா் மற்றும் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:29 am IST
தண்ணீா் குறைந்து காணப்படும் அவலாஞ்சி அணை.
பகிர்:

எல்- நினோ காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ளதால் மின் உற்பத்தி செய்யப்படும் அணைகளின் நீா்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீா் மற்றும் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்னகத்தின் நீா்த் தொட்டி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த காலகட்டத்தில் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை, அப்பா் பவானி, குந்தா, பைக்காரா, காமராஜா் சாகா் அணை உள்ளிட்ட 12 அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து காணப்படும்.

இந்த 12 அணைகளின் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுமாா் 838 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சமவெளி பிரதேசங்களான கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த ஆண்டு எல்- நினோ பாதிப்பு காரணமாக தென்மேற்குப் பருவமழை பொய்த்துள்ளதால் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீா்மட்டம் குறைந்ததால் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிா்வரும் வடகிழக்குப் பருவமழை குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி பெய்தால் மட்டுமே அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments