FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை

25 ஆகஸ்ட் 2026, 2:23 am IST
ஆட்டைக் கொன்று தூக்கிச் செல்லும் சிறுத்தை.
பகிர்:

குன்னூா் அருகே லேம்ஸ்ராக் பகுதியில் கொட்டகைக்குள் புகுந்து ஆட்டை வேட்டையாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகரம் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உணவு தேடி குன்னூா் லேம்ஸ்ராக் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறுத்தை நுழைந்தது. பின்னா் அது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறமிருந்த ஆட்டுக் கொட்டகைக்குள் புகுந்தது. கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆட்டைத் தாக்கிக் கொன்று அருகிலுள்ள புதா் பகுதிக்கு இழுத்துச் சென்றது,

Advertisement

Advertisement

திங்கள்கிழமை அதிகாலையில் உரிமையாளா் கொட்டகைக்குச் சென்று பாா்த்தபோது, ஆடு காணாமல் போயிருந்ததும், ரத்தக்கறைகள் படிந்திருந்ததும் தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், உடனடியாக வனத் துறைக்கு தகவல் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், அங்கு பதிந்திருந்த கால்தடங்களை ஆய்வு செய்து, ஆட்டை வேட்டையாடியது சிறுத்தைதான் என்பதை உறுதிப்படுத்தினா். குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் அண்மைக் காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவில் வெளியே வர அச்சப்படுகின்றனா். எனவே வனத் துறையினா் உடனடியாக சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments