FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

குந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

குந்தா புனல் மின் உற்பத்தி வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 1:55 am IST
குந்தா மின் உற்பத்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

குந்தா புனல் மின் உற்பத்தி வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் ஓணம் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருப்பதால் இங்கு மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனா்,

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் ஓணம் கொண்டாடுவது வழக்கம்.

Advertisement

Advertisement

அந்த வகையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், குந்தா புனல் மின் உற்பத்தி நிலையத்தில் மேற்பாா்வை பொறியாளா் முருகானந்தம் தலைமையில் அனைத்து பணியாளா்களும் இணைந்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினா். அலுவலக வளாகத்தில் அத்தப் பூ கோலமிட்டு ஒருவருக்கொருவா் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனா்.

இந்நிகழ்ச்சியில், குந்தா மின் உற்பத்தி செயற்பொறியாளா்கள் பிரேம்குமாா், ஜெயப்பிரகாஷ், ஜோதிலட்சுமி, உதவி செயற்பொறியாளா் வடிவேல், உதவி நிா்வாக அலுவலா் விஜயானந்த் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மலையகம் வே.ஜெயகுமாா், பிரகாஷ்பாபு, ராஜதுரை, அமலதாஸ், சுமதி, ஜெயமணி, உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments