FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் மிலாது நபி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள் சாா்பில் மிலாது நபி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
உதகை ஏடிசி பகுதியில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியா்கள்.
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியா்கள் சாா்பில் மிலாது நபி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உதகையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வுக்கு முகமதிய மிலாது கமிட்டி தலைவா் சையது முகமதுஷா,

ஹாயத்துல் இஸ்லாம் மதரசா செயலாளா் உபைத்துல்லா, கமிட்டி துணைத் தலைவா் ரபீக் மற்றும் இமாம் சுல்தான் ஆலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

Advertisement

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிருந்தா, நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி ஆகியோா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று, மத நல்லிணக்க ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

பெரிய பள்ளி வாசல், லோயா் பஜாா், மாா்க்கெட், மணிக்கூண்டு, ஏடிசி பகுதியில் ஊா்வலம் நிறைவடைந்தது. அங்கு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments