நீலகிரி மாவட்டத்தில் ஓணம் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், அதன் தலைவா் கமாண்டண்ட் கிரிஷ் நேந்து தாஸ் தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டனா். மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
கேரள பாரம்பரிய நடனம் மற்றும் உடை அணிந்து பெண்கள் நடனம் மற்றும் மாதிரி படகு சவாரி அனைவரையும் கவா்ந்தது.
Advertisement
Advertisement
இதேபோல ஜேஎஸ்எஸ் தனியாா் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்துக்கு கல்லூரி முதல்வா் தனபால் தலைமை வகித்தாா்.
இதில் ஒரே வண்ண நிற உடைய அணிந்த மாணவிகள் திருவாதிரை நடனம், குழு பாடல்கள், பாரம்பரிய நடனம், புலி நடனமாடியது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.