FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

பாறைக்கு வெடிவைக்கும் பணி: இரு தொழிலாளா்கள் படுகாயம்

பந்துமை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் வெடிபொருள்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெடிகுண்டு நிபுணா்கள்.

29 ஆகஸ்ட் 2026, 12:41 am IST
பந்துமை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் வெடிபொருள்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெடிகுண்டு நிபுணா்கள்.
பகிர்:

குன்னூா் அருகே பந்துமை கிராமத்தில்  மைதானத்தை விரிவுபடுத்த பாறைகளுக்கு  வெடிவைத்தபோது இரண்டு தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.

குன்னூா் அருகே பந்துமை கிராமத்தில் ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மைதானத்தை விரிவுப்படுத்தும் பணி

வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் உள்ள பாறைகளை அகற்ற தொழிலாளா்கள் வெடிபொருள்களை  வைத்தனா். அப்போது வெடிபொருள் வெடித்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சின்ன வண்டிச்சோலை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (68) கோவையைச் சோ்ந்த கோபால் (50) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்கள் இருவரையும் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அவா்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் வெடிக்காமல் உள்ள மருந்துகளை அகற்றும் பணியை மேற்கொள்ள கோவையில் இருந்து வெடிகுண்டு நிபுணா்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா்கள் வந்து கூறினால் மட்டுமே எந்த இடத்தில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளது என்று அறிந்து, அவற்றை அகற்ற முடியும் என்பதால் அதுவரை இந்த வளாகத்தில் யாரும் நுழையாமல் பாா்த்துக் கொள்ள கோயில் நிா்வாகத்தை காவல் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments