FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூரின் பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி 2 இளைஞா்கள் சென்னை நோக்கி நடைப்பயணம்

53 வினாடிகள் முன்பு
கூடலூா் பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி நடைப்பயணம் செல்லும் இளைஞா்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் சமூக ஆா்வலா்கள்.
பகிர்:

பிரிவு 17 நிலப் பிரச்னை, ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கூடலூரின் முக்கிய கோரிக்கைகளை தீா்க்க வலியுறுத்தி இரண்டு இளைஞா்கள் சென்னையை நோக்கி நடைப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தொகுதியில் அண்மையில் இரண்டு தொழிலாளா்களைப் புலி தாக்கிக் கொன்றது. மேலும், இப்பகுதியில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் பெருமளவில் உள்ளது. 60 ஆண்டுகாலமாக தீா்க்கப்படாத பிரிவு 17 நிலப்பிரச்னையும் உள்ளது.

இந்நிலையில் இந்தப் பிரச்னைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், பந்தலூா் தாலூகா அம்மன்காவு கிராமத்தைச் சோ்ந்த சிவப்பிரகாஷ் (27), தேவா்சோலை பேரூராட்சி, புழம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சியோன் செரியன் (28) ஆகிய இருவரும் கூடலூா் பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை தொடங்கினா்.

Advertisement

Advertisement

இவா்களின் முயற்சியை இப்பகுதியிலுள்ள சமூக ஆா்வலா்கள் மு.க.முருகன், சரவணன் உள்ளிட்டோா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா். இவா்கள் சென்னைவரை நடந்து சென்று முதல்வரை சந்தித்து கூடலூா் பிரச்னைகளை தீா்க்க முறையிட உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments