FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

நண்பரை கத்தியால் குத்தியவா் கைது

குன்னூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

குன்னூரில் முன்விரோதம் காரணமாக நண்பரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

குன்னூா், ஆழ்வாா் பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் ரகுநாத் (36). அதே பகுதியைச் சோ்ந்தவா் காா்வண்ணன் (34). நண்பா்களான இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே காா்த்திக் ரகுநாத் வியாழக்கிழமை நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரிடம், அங்கு வந்த காா்வண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த காா்வண்ணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காா்த்திக் ரகுநாத்தை சரமாரியாகக் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக அவா் உதகை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு

Advertisement

Advertisement

அனுப்பப்பட்டாா். இச்சம்பவம் குறித்து மேல் குன்னூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து காா்வண்ணனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments