மசினகுடி வனக் கோட்டத்தில் புலி உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வனத் துறையினா் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வனத் துறையினா் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்துக்கு உள்பட்ட சீகூா் காப்புக்காடு அம்மநாடு ஓடை பகுதியில் வனத் துறையினா் புதன்கிழமை (ஜூலை 8) வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்குள்ள ஓடை பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து சென்ற களப்பணியாளா்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் கண்டறிந்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, இறந்த புலியின் உடலை கூறாய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து வனச்சரக அலுவலா்கள், மருத்துவா்கள், களப்பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் முன்னிலையில் புலியின் உடல் வியாழக்கிழமை கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னா் புலியின் உடல் அதே இடத்தில் வனத்துறையினா் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது. புலி இறந்ததற்கான காரணம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.