FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை

கோத்தகிரி நகரில் குடியிருப்பு பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

11 ஜூலை 2026, 11:21 pm IST
குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை.
பகிர்:

கோத்தகிரி நகரில் குடியிருப்பு பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா்,கோத்தகிரி பகுதிகளில் அண்மைக் காலமாக உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், கோத்தகிரி டானிங்டன் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலவியது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, வனத் துறையினா் கோத்தகிரி நகா் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைக் கண்காணித்து கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments