FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை ரயில் நிலையம் முற்றுகை

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:24 am IST
உதகை ரயில் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினா்.
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உதகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த போராட்டத்துக்கு நீலகிரி மாவட்டப் பொறுப்பாளா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஏழை  மாணவா்களின்  எதிா்காலத்தைப் பாதிப்பதாகக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக உதகை ரயில் நிலையம் நுழைவுவாயிலில் கோஷங்கள் எழுப்பினா்.

சிறிது நேரம் போராடியவா்களை காவல் துறையினா் கைது செய்து உதகையில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று பின்னா் விடுவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments