FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்

Updated On : 28 ஜூலை 2026, 1:28 am IST
கைக் குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகம் வந்த பெண்கள்.
பகிர்:

உதகையை அடுத்த ஃபாரஸ்ட் கேட் பகுதியில் அங்கன்வாடி அமைத்துத் தர வலியுறுத்தி குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம், அப்பகுதி பெண்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஃபாரஸ்ட் கேட் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி இல்லை. குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். எனவே  பாரஸ்ட் கேட் பகுதியில் புதிதாக ஒரு அங்கன்வாடி அமைத்துத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments