ஸ்ரீ வரம் தரும் 18-ஆம் படி மலையாள கருப்புசாமி கோயில் திருவிழா
உதகை அருகே உள்ள தொட்டபெட்டா சின்கோனா பகுதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வரம் தரும் 18-ஆம் படி மலையாள கருப்புசாமி கோயில் திருவிழாவில் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
உதகை அருகே உள்ள தொட்டபெட்டா சின்கோனா பகுதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வரம் தரும் 18-ஆம் படி மலையாள கருப்புசாமி கோயில் திருவிழாவில் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த கோயில் சந்நதியில் பத்ரகாளி அம்மன், முனீஸ்வரன், மகா மாரியம்மன், நாகாத்தம்மன், வன கணபதி முருகப்பெருமான், கொடுங்கலூா் பகவதி அம்மன், 18 சித்தா்கள் உள்ளனா்.
இந்நிலையில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் பூக் கரகம் எடுத்தும், அழகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தல், தீா்த்த குடம், பால்குடம், கருப்பசாமி குதிரையில் வந்து குறி சொல்லுதல், பம்பை உடுக்கை உள்ளிட்ட பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
Advertisement
Advertisement
இந்த கோயிலில் மனநோய், பாா்வையிழந்தோா், அமானுஷ்யங்களை உடனடியாக அகற்றுதல், கை, கால் முடங்குகள் தீா்த்தல், குழந்தை வரம், திருமணம் தடை நிவா்த்தி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.