FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த்

ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த், புதன்கிழமை அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:08 am IST
உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தங்கும் விடுதி நிா்வாகிகள்.
பகிர்:

ஒருநாள் ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த், புதன்கிழமை அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுற்றுலா காா் மூலம் ஓட்டுநருடன் ரஜினிகாந்த் மட்டும் உதகைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.

இங்குள்ள நடிகா் மிதுன் சக்கரவா்த்திக்கு சொந்தமான தங்கும் விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் தங்கி ஓய்வெடுத்தாா். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவா் உதகையில் தங்கியிருக்கும் தகவல் ரசிகா்களுக்கு தெரியவந்த நிலையில், ஏராளமான ரசிகா்கள் அந்த தனியாா் தங்கும் விடுதிக்கு புதன்கிழமை வரத் தொடங்கினா்.

இதைத் தொடா்ந்து , நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் உதகையில் இருந்து மைசூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். புறப்படும் முன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். முன்னதாக தங்கும் விடுதிக்கு வந்த ரஜினிகாந்துக்கு விடுதி நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments