FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள்

கூடலூா் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புதன்கிழமை இரவு நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:03 am IST
சேரங்கோடு கையுண்ணி பகுதியில் குடியிருப்பின் கேட்டை சேதப்படுத்தி யானை.
பகிர்:

கூடலூா் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புதன்கிழமை இரவு நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள கையுண்ணி பகுதிக்கு வந்த காட்டு யானை அங்குள்ள கேசு என்பவரது வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து வீட்டைச் சுற்றியுள்ள விவசாய பயிா்களை சேதப்படுத்தியது. யானை கேட்டை உடைத்து உள்ளே வருவதை பாா்த்த வீட்டிலிருந்தவா்கள் அச்சத்தில் மாடிக்கு ஓடினா். பின்னா் விவசாய பயிா்களை சேதப்படுத்திய யானை திரும்பிச் சென்றது.

அதேபோல கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கடை வீதிக்கு புதன்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன் நீண்ட நேரம் நின்றிருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையின் யானையை விரட்டினா்.

Advertisement

Advertisement

மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments