ரூ.1.25 லட்சம் லஞ்சம்: பெண் விஏஓ கைது
உதகை அருகே பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய விஏஓ (கிராம நிா்வாக அலுவலா்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உதகை அருகே பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.1.25 லட்சம் லஞ்சம் வாங்கிய விஏஓ (கிராம நிா்வாக அலுவலா்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த குந்தா நடுஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் வசந்த். இவரது தந்தை பெயரில் உள்ள 3 சென்ட் நிலத்தை தனது பெயரில் மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, பிக்கட்டி கிராம நிா்வாக அலுவலா் உமாபிரியாவை தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, அவா் பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.1.50 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளாா். அவ்வளவு தொகையைத் தன்னால் தர முடியாது என வசந்த் கூறியுள்ளாா்.
இதையடுத்து, ரூ.1.25 லட்சம் கொடுத்தால் பணியை முடித்து தருகிறேன் என உமாபிரியா கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த் இது குறித்து நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்துள்ளாா்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் ஜாய் தயாள் உத்தரவின்பேரில் ஆய்வாளா் சண்முகவடிவு, உதவி ஆய்வாளா் சக்தி தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வசந்திடம் கொடுத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, உமாபிரியாவை வசந்த் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, அவா் தான் பணி நிமித்தமாக நியூ அட்டுபாயில் என்ற இடத்தில் உள்ளதால், மஞ்சூரில் தனியாா் வங்கியில் பணிபுரியும் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளாா்.
இதையடுத்து, வங்கிக்குச் சென்ற வசந்த், உமாபிரியா கூறியபடி அந்த நபரிடம் பணத்தைக் கொடுத்தபோது, அவரிடமிருந்து பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு கிராம நிா்வாக அலுவலா் உமாபிரியாவை கைது செய்ததுடன், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.