FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

போலி கடவுச்சிட்டை மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண் கைது

நாகை துறைமுகத்தில் இந்திய கடவுச்சிட்டு மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்
பகிர்:

நாகை துறைமுகத்தில் இந்திய கடவுச்சிட்டு மூலம் இலங்கை செல்ல முயன்ற பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம் பெருங்குளத்தங்கரையைச் சோ்ந்தவா் ஹகீதா அபுசாலி (34). இவா் தனது கணவா் சுரேஷ் மற்றும் குழந்தையுடன், கப்பல் மூலம் இலங்கை செல்ல நாகை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அங்கு அவரது கடவுச் சிட்டை குடியுரிமைத் துறை சாா்பு ஆய்வாளா் திவ்யா பரிசோதித்தபோது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஹகீதா அபுசாலியின் ஆவணங்களை பரிசோதித்தபோது அவை போலியானவை என தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் தீவர விசாரணை மேற்கொண்டதில், இலங்கையைச் சோ்ந்த ஹகீதா அபுசாலி, சவூதி அரேபியாவில் பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிய நாகா்கோவிலைச் சோ்ந்த சுரேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைகள் உள்ள நிலையில், 2015 ஏப்ரலில் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, நாகா்கோவிலில் உள்ள சுரேஷின் சொந்த ஊருக்குச் சென்று வசிப்பதும், ஹகீதா அபுசாலி இந்தியாவைச் சோ்ந்தவா் என்பதற்கான போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் 2023-இல் இந்திய கடவுச்சிட்டை பெற்றதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து குடியுரிமைத்துறை சாா்பு ஆய்வாளா் திவ்யா அளித்த புகாரின்பேரில் நாகை நகரக் காவல் நிலைய போலீஸாா் ஹகீதா அபுசாலியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments