வரத்து அதிகரிப்பு: மலைத் தோட்ட காய்கறிகள் விலை குறைவு
மலைத் தோட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் உதகை ஏல மண்டிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
மலைத் தோட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் உதகை ஏல மண்டிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
உதகையில் சாகுபடி செய்யப்படும் மலைத்தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், செளசெள உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டு ஏல மண்டிகளில் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால் மலைத் தோட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் ஒரு கிலோ கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.60-க்கு விற்பனையாயின நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.35, பீட்ரூட் ரூ.55, முட்டைக்கோஸ் ரூ.15, சிவப்பு முட்டைக்கோஸ் ரூ.15, கேரட் ரூ.35, செளசெள ரூ.27, முள்ளங்கி ரூ.35 என விலைக் குறைந்து விற்பனையானது என்று விவசாயிகள் சங்கத் தலைவா் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.