குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரத்தில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரத்தில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குன்னூா் அருகே வெலிங்டன் அண்ணா நகா் பகுதியில் சிறுத்தை வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் சுற்றித்திரிந்தது. நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை நீண்ட நேரம் அங்கேயே சுற்றித்திரிந்ததால், இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
பின்னா் நாய்கள் கிடைக்காததால் அருகே இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. வனத் துறையினா் கண்காணித்து சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement