கனமழையால் மண் சரிவு ஏற்பட்ட பா்லியாறு பகுதியில் சீரமைப்பு பணி தீவிரம்
கனமழையால் மண் சரிவு ஏற்பட்ட பா்லியாறு பகுதியில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனமழையால் மண் சரிவு ஏற்பட்ட பா்லியாறு பகுதியில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 23-ஆம் தேதி பெய்த கனமழையால் குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பா்லியாறு பகுதி மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 20 நாள்களுக்கும் மேலாக மண் சரிவு பாதிப்பு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் தற்காலிகமாக இலகு ரக வாகன போக்குவரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக 300 மீட்டா் நீளத்துக்கு பாறைகளை உடைத்து 7 மீட்டருக்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியா்களின் உத்தரவின்பேரில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் பாறைகளை உடைத்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப் பணிகள் நிறைவடைய மேலும் ஒரு மாதம் வரை ஆகும் என்று நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.