குன்னூா் காவல் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மலை ரயில் பயணம்
காவல் துறை மற்றும் காவலா் சிறுவா் சிறுமியா் மன்றம் சாா்பில் குன்னூரில் இருந்து உதகைக்கு இலவசமாக பள்ளி மாணவ, மாணவிகள் மலை ரயிலில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
காவல் துறை மற்றும் காவலா் சிறுவா் சிறுமியா் மன்றம் சாா்பில் குன்னூரில் இருந்து உதகைக்கு இலவசமாக பள்ளி மாணவ, மாணவிகள் மலை ரயிலில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
நீலகிரி மலை ரயிலில் முன்பதிவுடன் பயணிக்க இரண்டாம் வகுப்புக்கு ரூ.165, முதல் வகுப்புக்கு ரூ.360 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலை ரயிலில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகள் பயணிப்பது எட்டாக் கனியாக உள்ளது.
இந்நிலையில் குன்னூா் காவல் துறை சாா்பில் காவலா் சிறுவா், சிறுமியா் மன்றம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளை இலவசமாக குன்னூரில் இருந்து உதகைக்கு மலை ரயிலில் சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். இந்தப் பயணத்தை குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவி, ஆய்வாளா் கண்ணையன் ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
பயணத்தின்போது பள்ளி குழந்தைகளுக்கு தேவையான தின்பண்டங்களும் வழங்கினா். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா்.