FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

உதகை படகு இல்லத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

17 நவம்பர் 2026, 3:41 am
உதகை படகு இல்ல ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.
பகிர்:

உதகை படகு இல்லத்தில் திங்கள்கிழமை கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்களால் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். 

உதகைக்கு தினமும் வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

50 ஏக்கா் பரப்பளவு கொண்ட படகு இல்லத்தின் ஏரியில், 25 ஏக்கா் வரை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள், சரிவர சவாரி செய்ய முடியாமல் அதிருப்தி அடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

பொதுப்பணித் துறையின்கீழ் இயங்கும், நீா்வளத் துறை சாா்பில், ஆகாயத் தாமரையை அகற்றும் பணி, மிதவை பொக்லைன் மூலம் அவ்வப்போது  நடைபெற்று வந்தாலும் ஏரி முறையான பராமரிப்பு இல்லாததால்  பல ஆண்டுகளாக கழிவுநீா் கலப்பதால், ஏரி நீா் மாசடைந்து, நிறம் மாறி துா்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில், ஏரியில் மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கின்றன. குறிப்பாக இந்த ஏரியில் மட்டும் காணப்படும் அரிய வகையான கண்ணாடி கண்டை மீன்கள் செத்து வருகின்றன. இதனால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, அப்பகுதி முழுதும் துா்நாற்றம் வீசி வருகிறது. செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் படகு இல்ல ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படகு இல்ல ஏரியை ஆய்வு செய்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.