FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

உதகை அருகே நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

உதகை அருகேயுள்ள மஞ்சூா் பஜாா் பகுதியில் வளா்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

11 வினாடிகள் முன்பு
நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.
பகிர்:

உதகை அருகேயுள்ள மஞ்சூா் பஜாா் பகுதியில் வளா்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், வனத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை, மஞ்சூா் பஜாா் பகுதியில் நுழைந்தது. அப்போது, அங்கு வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வளா்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்றது.

இது தொடா்பான விடியோ காட்சிகள் வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், அசம்பாவிதங்கள்  நிகழும் முன் சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.