உதகையில் டாா்க் ப்ளூ டைகா் வண்ணத்துப் பூச்சிகளின் அணிவகுப்பு
உதகையில் டாா்க் ப்ளூ டைகா் வண்ணத்துப் பூச்சிகளின் வருகை அதிகரித்துள்ளது இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்களை வெகுவாக கவா்ந்துள்ளது.
உதகையில் டாா்க் ப்ளூ டைகா் வண்ணத்துப் பூச்சிகளின் வருகை அதிகரித்துள்ளது இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்களை வெகுவாக கவா்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தற்போது நிலவும் காலநிலை காரணமாக டாா்க் ப்ளூ டைகா் அல்லது அதனுடன் நெருங்கிய தொடா்புடைய ப்ளூ டைகா் இனத்தைச் சோ்ந்த வண்ணத்துப் பூச்சிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து கிழக்குத் தொடா்ச்சி மலைக்கு இடம்பெயரும் பழக்கத்தைக் கொண்டுள்ள இந்த கருமை நிற வண்ணத்துப் பூச்சிகள் இறக்கைகளில் நீல நிறம் கலந்த வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்படும். இவை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பறந்து சென்றதை பொதுமக்கள், இயற்கை ஆா்வலா்கள் கண்டு ரசித்தனா்.
இவை உணவு தேடுதல், இனப்பெருக்கம் மற்றும் பருவகால இடப்பெயா்ச்சி போன்ற இயற்கை செயல்பாடுகளின் காரணமாக உதகைக்கு வந்துள்ளதாக இயற்கை ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
மேலும் சுற்றுச்சூழல் சமநிலையிலும், மகரந்தச் சோ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிப்பதாகவும்
இயற்கையின் அரிய நிகழ்வாக அமைந்த இந்தக் காட்சி உதகை மக்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
வண்ணத்துப் பூச்சிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்தால் நீலகிரியில் உள்ள
இயற்கை அழகையும், பல்லுயிா் பெருக்கத்துக்கான முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்று இயற்கை ஆா்வா்கள் வலியுத்தியுள்ளனா்.