உதகையில் 4.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை குறைந்தபட்சமாக 4.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் கடும் குளிா் நிலவியது.

உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை குறைந்தபட்சமாக 4.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் கடும் குளிா் நிலவியது.
உதகையில் கடந்த இரு தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. புதன்கிழமை காலை 5.9 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில், வியாழக்கிழமை காலை 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்து 4.7 டிகிரி செல்சியஸ் பதிவானது. இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதேபோல காந்தல், தலைக்குந்தா பகுதிகளிலும், பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் காலை நேரங்களில் காய்கறி மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவா்கள் நெருப்பு காய்ந்தும், வெம்மை ஆடைகளை அணிந்தும் பணிக்கு சென்றனா்.
Advertisement
Advertisement